டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளோம்.... பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம்!!

டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளோம்.... பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம்!!

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்க கூட்டமைப்பின்  சார்பில் அக்டோபர் மாதம் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளோம் என அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்,

பிற்படுத்தப்பட்டோரின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் கூறிய அவர் குறிப்பாக ஜாதி வாரி கணக்கெடுப்பு 1931 க்கு பிறகு முழுமையாக நடத்தப்படவில்லை என்றும்  பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசியல் தனி அமைச்சகம் உருவாக்கிட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினர் என்னும் கிரிமினிலேயர் முறை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான  உயர் ஜாதியினரின் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், ஜாதி வாரி கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க:  கர்நாடகத்தை அசைத்து பார்த்த பாரத் ஜோடோ யாத்திரை...!!