" சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் நாங்கள். எந்த ஆட்சி வந்தாலும் எங்களை மிரட்ட முடியாது" - அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் .

" சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் நாங்கள். எந்த ஆட்சி வந்தாலும் எங்களை மிரட்ட முடியாது" - அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் .

" எந்த ஆட்சி வந்தாலும் எங்களை மிரட்ட முடியாது. அரசு இயந்திரங்கள் மூலம் எங்களை மிரட்ட முடியாது",   என அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.  

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் மாணவ -  மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாம்புவிழுந்தான் கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில்...

நாங்கள் யாருக்கும் அஞ்ச மாட்டோம், சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் நாங்கள். எந்த ஆட்சி வந்தாலும் எங்களை மிரட்ட முடியாது. அரசு இயந்திரங்கள் மூலம் எங்களை மிரட்ட முடியாது. எங்கள் பணி பொதுமக்களுக்கு நன்மை செய்வது. அது ஒன்றை மட்டுமே குறிக்கோளாக உள்ளோம். மிதிவண்டியை வாங்கிச் சென்று பயன்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் மிதிவண்டி கொடுக்கப்படும். ஒரு காலத்தில் சைக்கிளில் செல்வது மிகப் பெரியதாக பார்க்கப்படும்.

நான் சிவகங்கையில் வழக்கறிஞராக இருந்தபோது கூட சைக்கிளில் சென்று உள்ளேன். தற்போது யாரைப் பார்த்தாலும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்கின்றனர்.  பிள்ளைகள் படித்த பின்பு மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் நிற்கிறதோ ??  அப்பாக்கள் டாஸ்மாக் கடைகளுக்கு எடுத்து செல்கின்றனவோ என பேசினார். கல்வியும், சுகாதாரமும் தனது கண்கள் என முதல்வர் கூறியது போல் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளார் என பேசினார்.

செய்தியாளர்களிடம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பேசுகையில்...

ராமநாதபுரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணத்தை தொடங்க உள்ளார் என்ற கேள்விக்கு..

" அதெல்லாம் எங்களுக்கு ஒரு கட்சியா..?". ஆகஸ்ட் 17, 18 தமிழ்நாடு முதலமைச்சர் ராமநாதபுரத்திற்கு வருகிறார் என கூறினார். 

அண்ணாமலை நடைபயணம் குறித்த பாடலில் தமிழகத்தில் கொடுமைகள் நடைபெற்று வருவதாக வரிகள் இடம் பெற்றுள்ளது என்ற கேள்விக்கு..

" அவங்க எல்லாம் அப்படித்தான் ", என கூறினார்.

இதையும் படிக்க    | செந்தில் பாலாஜிக்கு எதிரான கோவாரண்டோ வழக்கு; தமிழக அரசு வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு!