” பாஜகவுடன் தனித்தனியாக மோதினால் வெல்ல முடியாது,. என்பதால் எதிர்கட்சிகளின் ஒன்று கூடி உள்ளனர்.” - ஜி.கே வாசன்.

” பாஜகவுடன் தனித்தனியாக மோதினால் வெல்ல முடியாது,. என்பதால் எதிர்கட்சிகளின் ஒன்று கூடி உள்ளனர்.” - ஜி.கே வாசன்.

பாஜகவுடன் தனித்தனியாக மோதினால் எதிர்கட்சிகள் வெல்ல முடியாது எனவும்,  நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயத்தினால் எதிர்கட்சிகள் பாட்னாவில் ஒன்று கூடி உள்ளனர் என்றும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன்  விமரிசித்துள்ளார்.

மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 

"பாஜகவை தோற்கடிக்க வேண்டும் எனும் நப்பாசையில் எதிர்க்கட்சிகள் பாட்னாவில் ஒன்று கூடி உள்ளன. பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டம் முடிவில்லா தொடர் கதை இருக்கும், பாஜகவுடன் தனித்தனியாக மோதினால் வெல்ல முடியாது என்பதால் எதிர்கட்சிகளின் ஒன்று கூடி உள்ளனர்.

Opposition Meet: Meeting begins in Patna to finalise strategy against ...

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயத்தினால் எதிர்கட்சிகள் ஒன்று கூடி உள்ளனர். எதிர்கட்சிகள் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவமாகும். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். அதிமுக கூட்டணியில் விரைவில் புதிய கட்சிகள் இணைய உள்ளன திமுகவின் தவறான நடவடிக்கை காரணமாக அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடினால் மட்டுமே சட்டம் - ஒழுங்கை காக்க முடியும், பிரதமரின் அமெரிக்க பயணம் பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்புக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.

લોકસભા ચૂંટણી 2024 - વિપક્ષી પાર્ટીઓનું ગંઠબંધન - opposition meeting in ...

எதிர்கட்சியை அமலாக்கத்துறை சோதனை செய்தால் திமுக சரி என்கிறது, ஆளும் கட்சியை சோதனை செய்தால் தவறு என்கிறது, ஆளுநர் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக ஆளுநரின் கருத்தை திரித்து திமுகவும் அதன் கூட்டணி கட்சியும் பேசி வருகிறது, திமுக அதிக அளவில் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை எமாற்ற நினைக்கிறது, திமுக தலைமையிலான அரசு மக்கள் மீது சுமையை கொடுப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

தொடர்ந்து,  ஆளுநர் சட்டத்துக்கு உட்பட்டு தனது பணிகளை செய்து வருகிறார், ஆளுநரை திமுக சந்தேக பார்வையில் பார்க்கிறது" என கூறினார்.

இதையும் படிக்க    | வேங்கை வயல் விவகாரம் "பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக்க முயன்று வருகிறார் சிபிசிஐடி டிஎஸ்பி" !