கல்விக்கும், தகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிகர்நிலை பல்கலைகழகங்கள் செயல்படுகின்றன-சென்னை உயர் நீதிமன்றம்

கல்விக்கும், தகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

சான்றிதழ்கள் வழங்கி, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிகர்நிலை பல்கலைகழகங்கள் செயல்படுகின்றன  என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கல்விக்கும் தகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

தொலைதூர கல்வி மூலம் பொறியியல் பட்டம் பெற்றவர்களை டான்ஜெட்கோவில் உதவி பொறியாளர்களாக பணி நியமனம் செய்ய வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் பி.இ. முடித்தவர்களை உதவி பொறியாளர் காலியிடங்களில் நியமிக்கலாம் என தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து நேரடியாக பி.இ. முடித்து இளநிலை பொறியாளர்களாக பணியாற்றுவோர்  தாக்கல்  செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்திருக்கிறது.