முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் - மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சு...

முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் - மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சு...

தமிழ்நாட்டில் தேவைப்பட்டால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கண்ணகி நகரில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதிதாகக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெறும் பயனாளிகளைப் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார். தொற்று பாதித்தவர்கள் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர் ஆலோசனைப் படி சிகிச்சை எடுத்தாலே போதுமானது என்றார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது பற்றி தேவை ஏற்பட்டால், கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க | வெயில் 2 நாட்களுக்கு கொளுத்த போகுது !!! பக்குவமாக இருந்துக்கோங்க

கொரோனா பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்ட்வியா உடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடியதாக அமைச்சர் தெரிவித்தார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.