களைகட்டிய தீபாவளி விற்பனை...ஜவுளிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் விடுமுறை நாளான இன்று நெல்லையில் உள்ள ஜவுளிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

களைகட்டிய தீபாவளி விற்பனை...ஜவுளிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி என்றாலே புத்தாடை இனிப்பு வகைகள் பட்டாசு என்று அமர்க்களமாக இருக்கும் தீபாவளி என்ற உடனே நினைவுக்கு வருவது ஆடைகள் தான் அந்த ஆடைகளை விற்பனை என்பது சூடுபிடித்து உள்ளது 

இதேபோல் குட்டீஸ்களுக்கு புதுரக ஆடைகளும் வந்துள்ளது. இந்த ஆடைகளை பொதுமக்கள் குழந்தைகள் அதிகமாக வாங்கி வருகிறார்கள். நெல்லை டவுன் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் இன்று காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஜவுளி கடைகளில் அதிகமாக கூட்டம் காணப்பட்டது. நெல்லை டவுன் வடக்கு பகுதி முழுவதுமே பொதுமக்களின் தலையாக காட்சி அளித்தது. 

போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் திருடர்களை கண்காணிப்பதற்காக நெல்லை மாநகர காவல்துறை சார்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.உயர் கோபுரம் அமைத்து அதில் வழியாக திருடர்களை காவல்துறை கண்காணித்தனர்