இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு.. பொறியியல் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்.. எப்போதில் இருந்து??

இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு..  பொறியியல் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்.. எப்போதில் இருந்து??

வரும் கல்வியாண்டு முதல், பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் "வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பொறியியல் பாட திட்டங்களை மாற்றுவது" என்கிற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டம் மாற்றப்படுகிறது என்றும், அதனை எவ்வாறு மாற்றவேண்டும் என்கிற அடிப்படையில் தொழில்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை இன்று நடைபெறுவதாகவும் கூறினார். அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் படிக்கும் போதே, பயிற்சி அளித்து அவர்களின் திறனை கண்டறியும் வகையில் பாடத்திட்டங்களை அமைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அப்போது தெரிவித்தார். இந்த புதிய பாடத்திட்டமானது வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என கூறியுள்ளார்.