என்னது 109-ஆ?.. நெருங்க போகுதா? பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!! டீசல் நிலைமை எப்படி? பாருங்க

சென்னையில், பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 109 ரூபாயை நெருங்கியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

என்னது 109-ஆ?.. நெருங்க போகுதா? பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!! டீசல் நிலைமை எப்படி? பாருங்க

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டு 108 ரூபாய் 96 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 99 ரூபாய் 04 காசுகளுக்கு விற்பனையாகிறது.

கடந்த 13 நாட்களில் 11 முறை பெட்ரோல் 7 ரூபாய் 56 காசுகளும், டீசல் 7 ரூபாய் 61 காசுகளும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர வாய்ப்புள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.