தடுப்பூசி போட மாணவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? மா.சு. சொன்ன பதில்!

இன்று கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை  லயோலா கல்லூரியில் பேராசிரியர்,மாணவர்கள் மற்றும் இதர கல்லூரி பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்வினை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து வகுப்பறைக்கு சென்று மாணவர்களுடன்  உரையாடினார்.

தடுப்பூசி போட மாணவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?  மா.சு. சொன்ன பதில்!

மேலும் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; இதுவரை தமிழகம் முழுவதும் 3.5 கோடி பேருக்கு அரசின் சார்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 21.28 லட்சம் பேருக்கு தனியார் மருத்துவமனையில்  தடுப்பூசி போடப்பட்டுள்ளது,  நேற்று மட்டும் 5.75 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஒரே நாளில்   அதிகபப்டியானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டது நேற்று தான் என்றும் கூறினார். சென்னையில் மாநில சுகாதாரத்துறையும் மாநகராட்சியும் இணைந்து  122 கல்லூரிகளில் தடுப்பூசி போடும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது. இன்று வகுப்புக்கு வரும் மாணவர்கள் தடுப்பூசி போடாவிட்டால், அவர்களுக்கு இங்கே தடுப்பூசி போடப்படும் என்றும் லயோலா கல்லூரியில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து வகுப்பறைகள் செயல்பட துவங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில 19 லட்சம் மாணவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என கல்லூரி நிர்வாகம் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தேசிய சாராசரியை காட்டிலும் தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு, அப்போதய அரசு மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதது தான் காரணம் என்று கூறிய அவர் , அதிமுக 100 நாட்களில் போட்ட தடுப்பூசிகளை விட இரண்டு மடங்கு திமுக 100 நாட்களில் போட்ப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தடுப்பூசிகள் போட மாணவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டாள் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, உயிர் மேல் ஆசை இல்லாதவர்கள் யாராவது இருப்பார்களா என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.  திமுக ஆட்சிக்கு வந்து 116 நாட்காளில் 2 கோடியே 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்றார்.