0% வட்டியில் பயனடைவது சாதாரண மக்களோ, ஏழைகளோ அல்ல... தமிழக நிதியமைச்சரின் வெள்ளை அறிக்கை...

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வெள்ளையறிக்கை

0% வட்டியில் பயனடைவது சாதாரண மக்களோ, ஏழைகளோ அல்ல... தமிழக நிதியமைச்சரின் வெள்ளை அறிக்கை...

தமிழக நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்து வருகிறார். அவரது அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.

  • கொரோனா பாதிப்பு பள்ளத்தில் தள்ளவில்லை..ஏற்கனவே சரிந்துள்ளதால் தான் சரிவு அதிகரித்துள்ளது.
  • கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு குடும்பத்தின் மேலும், சுமார் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தா  கடன் வைத்துள்ளனர்.
  • கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
  • 5 வருடத்தில் எடுத்த பொது கடன் 3 லட்சம் கோடி.
  • அதில் 50% வருவாய் பற்றாக்குறைக்கு, தின செலவிற்கு செலவு செய்யப்பட்டுள்ளது - பி.டி.ஆர்
  • கடந்த 5 ஆண்டுகளில், வேறு எந்த மாநிலமும் இந்த அளவிற்கு சரிவை சந்திக்கவில்லை
  • வருவாய் பற்றாக்குறை இருக்கும் போது நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்
  • கடனுக்கும் நிதி பற்றாக்குறைக்கும் முக்கிய காரணம் வருவாய் பற்றாக்குறை..
  • இதற்கு காரணம் வருமானம் சரிவு
    ஒரு குடும்பத்தின் தலையில் ₹2.63 லட்சம் கடன்
  • தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் பொது சந்தா கடன் மட்டும் ₹2,63,976ஆக இருக்கிறது
  • தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்து விட்டது
  • தமிழக அரசின் கடன் சுமை ₹5.24 லட்சம் கோடியாக உள்ளது
  • கலைஞர் ஆட்சியில் உற்பத்தி மற்றும் வருமானம் அதிகரித்தது.
  • ஆனால் வரி வருமான வளர்ச்சி, உற்பத்தி வளர்ச்சியில் பாதி பங்கு மட்டுமே உள்ளது.
  • 20ஆயிரம் கோடி ஜிஎஸ்டி  நிலுவை தொகை வரவில்லை - பி டி.ஆர்
  • மானியம் வழங்கியதில் உரிய முழுமையான விபரம் இல்லை - பி.டி. ஆர்
  • பல ஆண்டுகளாக சொத்து வரி அதிகரிக்கவில்லை - பி.டி.ஆர்
  • அதற்கு ஏற்றார்போல் வருமானம் வராததால், பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டுள்ளது.
  • ஊராட்சி, பேரூராட்சி நகராட்சி மாநகராட்சியில் கடந்த பல வருடமாக  சொத்துவரி அதிகரிக்கப்படவில்லை.
  • உள்ளாட்சி அமைப்புகள் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்கள்  1,743 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர்.
  • தமிழ்நாடு அரசு ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்துகிறது.
  • 1200 கோடி ரூபாய் மின்வாரியம் மாநகராட்சிகளுக்கு செலுத்தாமல் உள்ளது.
  • போக்குவரத்துத் துறையில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59 ரூபாய் இயக்குவதற்கான செலவில் நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
  • போக்குவரத்துத்துறை மின்சாரத்துறை, மின்சார பகிர்மான கழகத்தால்  மட்டும் அரசாங்கத்தில் 2 லட்சம் கோடி கடன்.
  • உலக பொருளாதார நெருக்கடி வந்தால் சராசரி மாநிலத்தை விட தமிழகம் அதிகம் பாதிக்கப்படும், இதுதான் தற்போதய நிலை.
  • முறைகேடு தவறு, நிர்வாக திறமையின்மை காரணமாக ஒரு லட்சம் கோடி வேறு இடங்களுக்கு சென்றுள்ளது.
  • நிதிநிலைமை எப்போது சரியாகும் என்பதை தேதி கூற முடியாது.
  • 5 வருடத்தில் சரி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது
  • தேர்தல் வாக்குறுதியை திசைத்திருப்ப இந்த அறிக்கை இல்லை
  • 2.05 லட்சம் ஹெக்டேர் ஆக்கிரமிப்புகள் உள்ளது.
  • இந்தியாவை ஒப்பிட்டு பார்த்தால் அளவில்லாத சொத்து உள்ளது.
  • தகுதி இல்லாத நபர்களிடம் நிதி செல்வதும் தவறு தான்.
  • 50% மட்டுமே முதலீடு செய்ததாக எதிர்கட்சித்தலைவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

  • 100% முதலீடு செய்ய வேண்டும் என்பதே சட்டம்