தமிழகத்தில் தொற்று பாதிப்பது கூடுவது ஏன்... சுகாதாரத்துறைச் செயலாளர் விளக்கம்...

மக்கள் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதால் தொற்றுக் கூடுவதாக சுகாதரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்னன் கூறியுள்ளர்.

தமிழகத்தில் தொற்று பாதிப்பது கூடுவது ஏன்... சுகாதாரத்துறைச் செயலாளர் விளக்கம்...

தமிழ்நாடு கண் மருத்துவ சங்கத்தின் 68 வது ஆண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் ,

தமிழகத்தில் ஒரு சில மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று உயர தொடங்கியுள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை மெகா தடுப்பூசி மூலம் 40 ஆயிரம் மையங்களில் 20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் தடுப்பூசி மையங்களை அதிகரித்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் ஒரு மையத்திற்கு 100 முதல் 200 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை  நாளை மெகா தடுப்பூசி முகாம் செயல்படும் இதற்காக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பின் விளைவு ஏற்படுகிறதா எனவும் பரிசோதித்த பின்னரே அனுப்பி வைக்கப்படுவார்கள்.

வழக்கமாக 2000 முகாம்களில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் நிலையில் நாளை 40 ஆயிரம் முக செயல்படும்.  இந்த மாதம் கூடுதலாக 17 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டு கோடி தடுப்பூசியை செலுத்த திட்டம் வகுப்பட்டுள்ளாது எல்லை மாவட்டங்களிலும் மக்களுக்கு  முழுமையாக தடுப்பூசியை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சிகளில் கூட்டமாக  பங்கேற்று திரும்பவதால் கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரிக்கிறது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நடிகர் விவேக் மரணம் தொடர்பாக 8 வார காலத்திற்குள் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மனித உரிமை ஆணையம் மத்திய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன் மனித உரிமை ஆணையம் அதற்கான பதிலை தெரிவிப்போம் என்றார்.