கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்காதது ஏன்? - அண்ணாமலை

கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்காதது ஏன்? - அண்ணாமலை

கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி தருவதில்லை என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். 

'என் மண் என் மக்கள்'  என தமிழ்நாட்டில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த அண்ணா நகர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். 

பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி நாட்டுக்கு அளித்த திட்டங்கள் குறித்து விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர், தேனி மாவட்டத்தில் மத்திய அரசின் பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இதையும் படிக்க : "என்னம்மா ஏய்..." மாரிமுத்து காலமானர்!

அதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளிகள் மூலம் மத்திய அரசு தரமான கல்வி வழங்கி வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் ஒன்றல்ல 100 கேந்திர வித்யாலாயா பள்ளிகளை தொடங்க கூட மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் தமிழகத்தில் கேந்திர வித்யாலயா பள்ளிகள் தொடங்க மாநில அரசு அனுமதியும் தருவதில்லை, இடம் தேர்வு செய்தும் தர மறுத்து வருகிறது.

எனவே, தற்போது உங்கள் சார்பாக நானும் மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன், கேந்திர வித்யாலயா பள்ளிகள் தொடங்க மாநில அரசு நிலம் தேர்வு செய்து தரவேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.