"வாழ்த்து சொல்வதில் முதலமைச்சருக்கு பாகுபாடு ஏன்?" - தமிழிசை சௌந்தர்ராஜன்.

"வாழ்த்து சொல்வதில் முதலமைச்சருக்கு பாகுபாடு ஏன்?" -  தமிழிசை சௌந்தர்ராஜன்.

திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் உள்ள ஸ்ரீராம் வேலம்மாள் போதி கேம்பஸ் தனியார் பள்ளியின்  ஒன்பதாம் ஆண்டு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில  துணைநிலை ஆளுநரும் ,தெலுங்கானா மாநில  ஆளுநருமாகிய தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் , பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு வெள்ளி வேல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில்,சமீபத்தில் பேட்டி ஒன்றில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறும்போது,

நாங்கள் இந்துக்கள் என்பதால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை என்றும் அப்படி வாழ்த்து சொல்லினால் நாமே நமக்கு வாழ்த்து சொல்லிக் கொள்வது போன்று அமைந்துவிடும் என்றும் கூறியாதை சுட்டிக்காட்டி, இதன் மூலம் அவர்கள் இந்துக்கள் என்று தங்களை கூறிக் கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தாலும்,
ஒரு தாய் தான் பெற்ற குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில்லையா? அப்படி  இருப்பின் தமிழக அரசு இந்துக்களுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில் பாகுபாடு காட்டுவது ஏன்?  என்று கேள்வி எழுப்பினார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், அமைச்சர் துரைமுருகன் அவர்கள் ஆளுநர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டளை இட வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஆளுநர் என்பவர் அவரது பணிகளை செய்து கொண்டிருப்பதாகவும், அவருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம் எனவும் கூறினார். 

இதையும் படிக்க      } எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்.... நிலையை உருவாக்குவற்கான சிறப்புச் சட்டம்!!!

மேலும், அப்படி இருப்பின் அவரது கருத்துக்கு கருத்தால் பதில் சொல்ல வேண்டுமே தவிர ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறுவது வருத்தம் அளிக்கக்கூடிய செயல் என்று கூறினார். இதே போன்று திமுக எதிர்கட்சியாக இருந்த போது அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆளுநர் மாளிகையை நோக்கி சென்று முறையிட்டார்கள் என்றும் கூறினார். 

இதையும் படிக்க      } ‘தி கேரளா ஸ்டோரி’ வங்கத்தில் தடை...! அதிரடி காட்டுமா தமிழ்நாடு. கேரளா...?