திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

திருமணம் என்ற தகுதிக்கு முன்பு கல்வி என்ற நிரந்தர சொத்து பெண்களுக்கு வேண்டுமென்பதால், திருமண உதவி திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

திருமண உதவி திட்டம் மாற்றியமைக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர்,

தமிழகத்தில் உயர்நிலைக் கல்வியில் பெண்கள் சேர்வது 46 சதவீதம் மட்டுமே இருப்பதால் அதை சரி செய்ய வேண்டும் நோக்கத்தில்தான் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பெண் உரிமை கொள்கையின் மறுவடிவம் தான் இந்த நிதி உதவி வழங்கும் திட்டம், திருமண உதவி திட்டத்தின் கீழ் 1 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்தனர் - ஆனால் உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் 6 லட்சம் பேர் பயனடைய உள்ளனர் என தெரிவித்த முதலமைச்சர், திருமணம் என்ற தகுதிக்கு முன்பு கல்வி என்ற நிரந்தர சொத்து உரிமை பெண்களுக்கு வேண்டும் என்றும் பெண்ணுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் இத்திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம் என விளக்கம் அளித்தார்.

சமூக நீதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கம் என்பதால் கட்சி பாகுபாடின்றி இத்திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுகொண்டார்.