விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானை- துரத்திய பொதுமக்கள்  

நீலகிரி மாவட்டம் கூடலூரில் விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானையை பொதுமக்கள் கூச்சலிட்டு வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.  

விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானை- துரத்திய பொதுமக்கள்   

நீலகிரி மாவட்டம் கூடலூரில் விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானையை பொதுமக்கள் கூச்சலிட்டு வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 

கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் கடந்த வாரம் முழுவதும் விநாயகன் என்ற காட்டு யானை விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருகிறது.

வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் யானையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கிராம பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை பிரதான சாலை வழியே கிராமத்திற்குள் நுழைந்தது விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களையும் சேதப்படுத்தியது. 

யானையை அப்பகுதி பொதுமக்கள் விடிய விடிய கூச்சலிட்டு வனப்பகுதிக்குள் விரட்டினர் யானையின் நடமாட்டத்தால் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகுந்த அச்சத்தோடு உள்ளனர். காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.