9 மாவட்ட ஊராட்சிகளுக்கான ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு...

9 மாவட்ட ஊராட்சிகளுக்கான ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்று கொண்டார். 

9 மாவட்ட ஊராட்சிகளுக்கான ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு...

புதிதாக உருவாக்கப்பட்ட9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஒன்றியக் குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் வெற்ற பெற்றவர்கள் இன்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்பு பதவி ஏற்றுக்கொண்டனர். 

அதன்படி விழுப்புரம் மாவட்டம் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் மயிலம் ஒன்றிய குழு தலைவராக திமுகவை சேர்ந்த யோகேஸ்வரி மணிமாறன் போட்யின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பெரியசாமி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியக் குழு தலைவராக திமுகவை சேர்ந்த திலகவதி நாகராஜன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைதொடர்ந்து அவருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி ஒன்றியக்கு குழு தலைவராக  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக சங்கராபுரம் ஒன்றியக்கு குழு தலைவராக திமுகவை சேர்ந்தவர் பதவியேற்றது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் ஓப்பிலால் மற்றும் பத்மபிரியாவும் அதிமுக சார்பில் கீதா என்பவரும் போட்டியிட்டனர். இதில் கீதாவுக்கு 10 வாக்குகளும் பத்மபிரியாவுக்கு 7 வாக்குகளும், ஓப்பிலாலுக்கு 5 வாக்குகளும் பதிவாகின. இந்தநிலையில் பெரும்பான்மை நிலையில் யாரும் இல்லாததால் இரண்டாவது முறையாக கீதா மற்றும் பத்மபிரியாவுக்கு இடையே தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த கீதா வெற்றி பெற்று ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் 7 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஊராட்சி குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட திமுகவை சேர்ந்த ஜெயந்தி திருமூர்த்தி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இதைதொடர்ந்து திமுகவை சேர்ந்த  7 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.