சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண் கைது...! துணை ஆணையர் அதிரடி..!

சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த பெண்ணை 305 நாட்கள் சிறையில் அடைத்த போலிசார்...புது வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அதிரடி..!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண் கைது...! துணை ஆணையர் அதிரடி..!

வடசென்னை புதுவண்ணாரப்பேட்டைப் பகுதிக்கு உட்பட்ட சுனாமி குடியிருப்பில் பிரேமா என்ற பெண், சட்ட விரோதமாக மது பாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே தொடர்ந்து பல வருடங்களாக, கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததால் பல வழக்குகள் இவர் மீது இருந்து வருகிறது. 

இந்நிலையில், இனி 'இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன்' என எழுதி கொடுத்துள்ளார். ஆனால் அதையெல்லாம் மீறி, மீண்டும் மது பாட்டில்களை, கள்ள சந்தையில் விற்பனை செய்வதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், போலீசார் சோதனை மேற்கொண்டதில் பிரேமா மது விற்பனை செய்தது உறுதியானது. 

இதனையடுத்து நன்னடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக, பிரேமாவை 
305நாட்கள் சிறையில் அடைக்க, புதுவண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி உத்தரவிட்டார். பின்னர், கைது செய்யப்பட்ட பிரேமாவிடம் இருந்து மொத்தம் 191 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.