காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு.. உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டம்!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு.. உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டம்!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆரோட்டு பாறை பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததால், கும்கி யானைகளை கொண்டு வந்து காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பாரம் பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்பவர் தனது சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிகொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த காட்டு யானை அவரை கடுமையாக தாக்கியது. இதில் தலை சிதைந்து அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரின் வாகனங்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் சோலார் மின் வேலிகள் அமைக்கப்படும், யானை நடமாட்டத்தை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

அதன் பிறகு சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்களில் இரண்டு பேரை காட்டு யானை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.