இன்று மாலை 5 மணி முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...

நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, வரும் செப்டம்பர் 12ஆம் நடக்கவுள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது.

இன்று மாலை 5 மணி முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...

நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, வரும் செப்டம்பர் 12ஆம் நடக்கவுள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது.
.
கொரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. இதற்கிடையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன. இந்நிலையில், வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று இணையத்தில் வெளியிட்டார். கடந்தமுறை 155 நகரங்களில் நடைபெற்ற நீட் தேர்வு, இந்தமுறை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, 198 நகரங்களில் நடத்தப்படும் என்றும், தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை மாணவர்களுக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ளபடி, நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.