எய்ம்ஸ் விவகாரம்...இந்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதுவதாக ராஜன் செல்லப்பா கூறுகிறார்! 

வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் முதல் கட்ட கட்டடங்கள் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.

எய்ம்ஸ் விவகாரம்...இந்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதுவதாக ராஜன் செல்லப்பா கூறுகிறார்! 

மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை 2026 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் என இந்திய ஒன்றிய அரசு அனுப் பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப் பினர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். 

ஒன்றிய அரசுக்கு கடிதம்

முதலாவதாக 2 கட்டட தொகுப்புகள் கட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். வெளி நோயாளி சிகிச்சை பிரிவு மற்றும் முதலாமாண்டு மாணவர்கள் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வலியுறுத்தி உள்ளேன். 2023 ஆம் ஆண்டுக்குள் முதல் கட்ட கட்டடங்கள் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். நாடாளுமன்ற உறுப் பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர நோக்கில் செயல்படுகிறார்கள்,

சு.வெங்கடேசன் விலக வேண்டும்

எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப் பினர்களாக உள்ள நாடாளுமன்ற உறுப் பினர்கள் எம்ய்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் என்ன நடவடிக்கைகள் எடுத்து உள்ளார்கள். இந்திய அரசிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எம்ய்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் உறுப் பினராக உள்ள நாடாளுமன்ற உறுப் பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் அப்பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மதுரை மாநகராட்சி சிறப்பாக செயல்படவில்லை. 

அதிகாரிகளை மிரட்டுகிறது திமுக

மதுரை மேயர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். மதுரை விமான நிலையம் விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், உயர்மட்ட பாலங்கள், பாதாள சாக்கடை பணிகள் போன்ற திட்டங்கள் அறிவிப்போடு நிற்கிறது. அரசு அதிகாரிகளை மிரட்டுவது திமுகவுக்கு இயற்கையான ஒன்று, காலை சத்துணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும்.

அனைத்து கல்லூரி மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும், திமுக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் குடும்பப் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்காததால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 16 ஆயிரம் ரூபாய் (1000×16 மாதம்) தமிழ்நாடு அரசு கடன் வைத்துள்ளது. 

ஓ. பி.எஸ்-க்கும் அதிமுகவிற்கும் தொடர் பில்லை

எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்க திமுக அரசு எந்தவொரு முயற்சியை எடுக்கவில்லை. ஒன்றிய அரசின் மீது பழி போடுவதையே தமிழ்நாடு அரசு வாடிக்கையாக கொண்டு உள்ளது. தமிழ்நாடு அரசு நிர்வாகத் திறமையற்றதாக செயல்பட்டு வருகிறது. ஓ. பி.எஸின் வரலாறு முடிந்து விட்டது, அதிமுகவுக்கும் ஓ. பி.எஸ்க்கும் 100 சதவீதம் சம்பந்தம் இல்லை. ஓ. பி.எஸ் குறித்து எதையும் பேச வேண்டாம் என இ. பி.எஸ் உத்தரவு பிறப் பித்துள்ளார், அதிமுகவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்" என கூறினார்