திருமாவளவனை இணைக்க பாஜக திட்டமா?

திருமாவளவனை இணைக்க பாஜக திட்டமா?

சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக திருமாவளவனும், பாஜகவும் விரும்புவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், திருமாவளவன் உள்ளிட்டவர்களையும் நட்பு சக்தியாகவே பார்க்கிறோம் என பாராட்டியுள்ளார். திமுகவின் கூட்டணியில் உள்ள திருமாவளவனை அண்ணாமலை பாராட்டியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.