பேக்கரியை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர்,.! கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டிய ஸ்டாலின்.! 

பேக்கரியை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர்,.! கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டிய ஸ்டாலின்.! 

மதுரை மாவட்டம் வா டிப்பட் டியில் அதிமுக பிரமுகர் அசோக் என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது.கொரோனா முழு ஊரடங்கு காரணமாக கடை மூடப்பட் டிருந்த நிலையில் கடந்த 5ம் தேதி மாலை கையில் பட்டா கத்தியுடன் பேக்கரி கடை வாசலில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது.

அதன் பின் பேக்கரி கடை முன் போடப்பட் டிருந்த கண்ணா டிகளை அ டித்து நொறுக்கியும், டேபிள், சேர்களை தூக்கிவீசியும், அந்த வளாகத்திலுள்ள அரசு வங்கி ஜன்னல் கண்ணா டிகளையும் அ டித்து நொறுக்கியும் வாசலில் நின்ற இரு சக்கர வாகனங்களையும் அ டித்து நொறுக்கியதுடன் அப்பகுதியில் நின்று கொண் டிருந்த பொதுமக்களையும் கத்தியை காட் டி மிரட் டினர்.இச்சம்பவம் குறித்த சி.சி. டிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த வா டிப்பட் டி போலீசார் சி.சி. டி.வி. காட்சிகளின் அ டிப்படையில் பேக்கரி உரிமையாளர் அசோக் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக திமுக பிரமுகர் அதிமுகவினருக்கு சொந்தமான கடையை அ டித்து நொறுக்கியது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக திமுக பேரூராட்சி செயலாளர் பிரகாசம் என்பவரது கார் ஓட்டுனரும்,மாணவரணி செயலாளருமான அசோக்குமார்,சுபாஷ், பெரிய மருது ஆகிய 3 பேரை 6ம் தேதி கைது செய்த காவல்துறை சம்பவத்தில் தொடர்புடையதாக மேலும் அறிவுச்செல்வம், பிரகாஷ், கார்த்திக் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.6 பேர் மீதும் ஆயுதங்களை பயன்படுத்தியது, பொதுமக்களை அச்சுறுத்தியது, வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே இச்சம்பவதிற்கு தூண்டுதலாக இருந்ந்ததாக கூறப்படும் திமுகவின் வா டிப்பட் டி பேரூராட்சி செயலாளர் பிரகாசத்தை கழக கட்டுப்பாட்டையும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி கட்சியின் அ டிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உத்தரவிட்டுள்ளார்.