பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்.! இது தான் காரணமா?

பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்.! இது தான் காரணமா?

கடந்த 2019ம் ஆண்டு திருமாவளவன் ஹிந்துக்களை அவதூறாகப் பேசியதாக கூறி சர்ச்சை கிளம்பியது. இது சர்ச்சையான நிலையில் தான் பேசியதில் ஒரு பகுதியை மட்டுமே வெளியிட்டு அவதூறு பரப்புவதாகவும், நான் பேசியது யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்வதாக திருமாவளவன் கூறியிருந்தார். 

ஆனால் பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் திருமாவளவன் பேசிய வீடீயோவை தனது ட்விட்டரில் பகிர்ந்து 'அடியுங்கள்' எனக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து  திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய நடிகை காயத்ரி ரகுராமை கைது செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி வழக்கறிஞர் காசி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் பாஜக-வை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு ஜூலை 12ல் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டு சம்மன் அனுப்பியுள்ளது.