ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் நிலை என்ன?

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் நிலை என்ன?

போச்சம்பள்ளி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட (மாயமான) சிறுவனை  தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லக்குடபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன். பண்ணந்தூரில் பேக்கரி கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் ரிஷிதரனை தினமும் சகாதேவன் தன்னுடன் செல்லகுடபட்டி தென்பெண்ணை ஆற்றின் வழியாக பேக்கரி கடைக்கு அழைத்து செல்வது வழக்கம். தற்போது கே.ஆர்.பி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதையொட்டி, சகாதேவன் தன் மகனை  வீட்டிலேயே விட்டு விட்டு வேறு வழியில் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, ரிஷிதரன் சிறிது நேரம் கழித்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக கடந்து செல்ல முயன்ற போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறயுள்ளனர். இதை அறிந்த சகாதேவன் பாரூர் போலீசாருக்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் தீயணைப்பு துறையினர் காலை முதல் மாலை 6 மணிவரை ஆற்றில் முழுவதும் தேடி பார்தனர். இருந்தும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக கருதப்படும் ரிஷிதரன் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.

இதையும் படிக்க:நள்ளிரவில் கமிஷ்னர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் 50 பேர் மீது வழக்கு!