தடுப்பூசி செலுத்த லஞ்சமா? -சென்னையில் பரபரப்பு

தடுப்பூசி செலுத்த லஞ்சமா? -சென்னையில் பரபரப்பு

உலகம் முழுவது அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா தொற்றுக்கு பலரும் பலியாகி வருகின்றனர். இதனை தடுப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது 2ம் கட்ட தடுப்பூசி நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னை உள்ள புழல் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைக்கு, லட்சுமிபுரம் கல்பாளையத்தை சேர்ந்த நந்தகோபால், அவரது மனைவியுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த பணியாளர்கள் தடுப்பூசி காலியாகிவிட்டதாக கூறி 2 நாட்களுக்கு பிறகு வரும்படி கூறியுள்ளனர்.
இந்நிலையில் சமுதாய நல மருத்துவமனையில் தற்காலிக காவலராக பணியாற்றும்  தினகரன், தடுப்பூசி போடவந்தபவர்களிடம் ரூ.500 கொடுத்தால் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு  செய்வதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து தற்காலிய கம்பவுண்டராக பணியாற்றிய புளியந்தோப்பை சேர்ந்த பிரசாந்த என்பவரிடம் நந்தகோபால் 300 ரூபாயை கொடுத்துள்ளார். மீதி ரூபாய் 200 கூகுள்பே மூலம் அனுப்ப செல்லியுள்ளார்.   

இதனையடுத்து அவர்கள் கணவன், மனைவி இருவரையும் தடுப்பூசி போட மருத்துவரிடம் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்தில் நந்தகோபால் புகார் அளித்துள்ளார்.இதனை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனை ஊழியர் தினகரம் மற்றும் பிரசாந்த் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.