அதிமுக அலுவலகத்தில் இரண்டாவது முறையாக சிபிசிஐடி விசாரணை!

அதிமுக அலுவலகத்தில் இரண்டாவது முறையாக சிபிசிஐடி விசாரணை!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி  காவல்துறையினர் 2 ஆவது முறையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக அலுவலக வழக்கு

கடந்த ஜூலை 11 அன்று ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இரு தரப்பும் மோதிக் கொண்டதில் காவலர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனால் அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரிடம் அதிமுக அலுவலக சாவியை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க : முழுவதும் ஈபிஎஸ் கைக்கு சென்ற தலைமை அலுவலகம்..!

சிபிசிஐடி விசாரணை

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஏற்கனவே கடந்த வாரம் சிபிசிஐடி ஆய்வு நடத்தியிருந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் 2.50 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் வந்த சிபிசிஐடி ஆய்வாளர் லதா உள்ளிட்ட 3 பேர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று ஒன்றரை மணி விசாரணை நடத்திய நிலையில் தற்போது நேரடி விசாரணை நடைபெற்று வருகிறது.ச்