புல்லட் ரயிலில் பயணம் செய்த முதலமைச்சர்!

புல்லட் ரயிலில் பயணம் செய்த முதலமைச்சர்!

அரசு முறை பயணமாக ஜப்பானுக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ஐப்பான் நாட்டின் ஒசாகாவில் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஒசாகா கோட்டைக்கு சென்று பாா்வையிட்டாா். இதுகுறித்து அவரது ட்விட்டா் பதிவில், இந்தியாவைப் போன்ற தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஜப்பான் நாட்டின் பண்பாட்டு அடையாளமாக திகழும் ஒசாகா கோட்டையை  காணக்கூடிய வாய்ப்பு தற்போது அமைந்தது எனவும், அழகிய புன்னகையோடு ஜப்பான் குழந்தைகள் பொழிந்த அளவற்ற அன்பில் நனைந்தவாறே அவர்களின் வரலாற்றை அறிந்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளாா். Image

இதனைதொடர்ந்து ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின், புல்லட் ரயிலில் பயணம் செய்வதன் மூலம் 500 கிலோ மீட்டர் தூரத்தை இரண்டரை மணி நேரத்திற்குள் அடைந்து விடுவோமென்றும் கூறியுள்ளார். வேகத்திலும், தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை இந்தியாவிலும் பயன்பட்டுக்கு வர வேண்டும் என்றும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!