பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

படுகாயம் அடைந்த ஓட்டுனர் யேசுதாஸ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

அரசுப் பேருந்து ஓட்டுனரை ஒருவர் தாக்கியுள்ளார்  குமரி மாவட்டம் , மார்தாண்டத்திலிருந்து- வள்ளவிளை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை திடீரென வழிமறித்த நபர் , ஒட்டுனர் யேசுதாஸ் உடன்  வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு

வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த நபர் , அரசு பேருந்தின் ஓட்டுனரை பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஓட்டுனர் யேசுதாஸ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். ஆனால்  மார்த்தாண்டம் போலீசார் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மீது பொய் வழக்கை பதிவு செய்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை

இதை எதிர்த்து சி.ஐ.டி. யு தொழிற்சங்க அரசு போக்குவரத்து  தொழிலாளர்கள் படந்தாலுமூடு அரசு போக்குவரத்து கழகம் முன்பு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர் மீது   நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டு போராட்டத்தின் போது கோரிக்கை விடுத்துள்ளனர்.