முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம்..!

முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம்..!

டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுக்கிறார். அப்போது, கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்.

முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர், தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை நேரில் வலியுறுத்துவதோடு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கிறார்.  அதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் மு.க.ஸ்டாலின் வற்புறுத்த உள்ளார்.

இதனைத்தொடர்ந்து நாளை  காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் டெல்லிக்கு முதல் முறையாக செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சில அமைப்புகளின் அச்சுறுத்தல் இருப்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்குகிறது.