டெல்டாவில் நிலக்கரி திட்டம்...! கைவிட்டது மத்திய அரசு...!!

டெல்டாவில் நிலக்கரி திட்டம்...! கைவிட்டது மத்திய அரசு...!!

நிலக்கரி சுரங்கம் அமைப்பது மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்  பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுவரப் பட்ட நிலையில் புதிய நிலக்கரி திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக மத்திய அரசு கடந்த மார்ச் 29ம் தேதி காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக  மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டது. இதில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு உள்ளடக்கிய  20 கிராமங்களில் 21,000 ஏக்கர் நிலங்களையும், அரியாலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி உள்ளடக்கிய 3 கிராமங்களில் 3500 ஏக்கர் நிலங்களும், தஞ்சை மாவட்டம் வடசேரியை உள்ளடக்கிய 11 கிராமங்களில் 17,000 நிலங்களும் ஏலத்திற்கு விடப்படுவதாக அறிவித்தது.

இதற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்  பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுவரப்பட்டது. இந்நிலையில் காவிரி டெல்டா பகுதியில் அமைய இருந்த நிலக்கரி சுரங்க திட்டத்தை திரும்பப் பெறுவதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.