ஒப்பந்ததாரர்களின் பிடியில் தாம்பரம் மாநகர அதிகாரிகளா?

ஒப்பந்ததாரர்களின் பிடியில் தாம்பரம் மாநகர அதிகாரிகளா?

செங்கல்பட்டு மாவட்டம்  தாம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மனிதநேய மக்கள் கட்சியின்  கழக சார்பில் மாவட்ட பொது குழு கூட்டம் நடைபெற்றது.

மாவட்டக்குழு கூட்டம்

இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு,புதிய நிர்வாகிகளை தேர்தெடுக்கபட்டனர். அவர்களுக்கு நிர்வாகியாக நியமன அடையாள அட்டை வழங்கப்பட்டதுஇதில் தமிழ்நாடு முஸ்லீம், முன்னேற்ற கழகம் மற்றும் மணிநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

ஒப்பந்ததாரர்களின் பிடியில் அதிகாரிகள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் துனைப் பொதுசெயலாளர் தாம்பரம் யாக்கூப் பேசுகையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரத்தில் ஏழை, எளிய மக்கள் வாழும் பகுதியில் குடிநீர் குழாயில் கழிவு நீர் வருவது குறித்து மாமன்ற கூட்டத்தில்  பலமுறை புகார்  அளித்தும் தாம்பரம் மாநகராட்சி  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

குறிப்பாக ஒப்பந்ததாரர்களுக்கு அடிமையாகத் தான் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் செல்லும் கார்கள்,சாப்பிடும் உணவு கூட ஒப்பந்ததாரர்கள் செலவு செய்து வருகிறார்கள் என குற்றம் சாட்டினர். மேலும் வருங்காலத்தில் ஒப்பந்ததாரருடன்  அதிகாரிகள் எங்கெங்க சென்றார்கள், என்னென்ன செய்தார்கள் என்பரை  முறையான ஆவணங்கள்  வெளியிடுவோம் என பேசினார்.