மருது பாண்டியர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி!

மருது பாண்டியர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி!

சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் என அழைக்கப்படும் பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் 221 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மருது சகோதரர்கள் பற்றி குறிப்பிட வேண்டும் என்றால், மருது பாண்டியர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றியவர்கள். ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மருது சகோதரர்கள் 24. 10.1801ல் திருப்பத்தூர் கோட்டையில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டனர். 

இவர்களது தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் மருது சகோதரர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.