மானாவாரி நிலத்தில் விளைச்சல் அமோகம்...விவசாயிகள் மகிழ்ச்சி!

மானாவாரி நிலத்தில் விளைச்சல் அமோகம்...விவசாயிகள் மகிழ்ச்சி!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள மானாவாரி நிலத்தில் தொடர் மழையால் விளைச்சல் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அதிக அளவில் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. இவ்வாண்டு கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து நன்றாக பெய்ததால் மானாவாரி விவசாயத்தை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டிருந்தனர்.

இதில் லட்சுமிபுரம், வடபுதுப்பட்டி, காமக்கப்பட்டி, ஜல்லிபட்டி, சில்வார்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் வெள்ளை சோளம், இரும்புச் சோளம், எல், பச்சை பயிரு, தட்டை பயிர், கேப்பை போன்ற தாணியங்களை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில் 90 நாள் பயிரான வெள்ளை சோளத்திற்கு தொடர்சியாக நல்ல மழை பெய்ததால் வெல்லை சோலம் நல்ல விளைச்சல் அடைந்து அருவடைக்கு தயாராகி வருகிறது. தற்பொழுது பழங்கால சிறுதானிய வகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற் உள்ளதால், இது போன்ற தானிய வகைகளை மானாவாரி விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர்.

அறுவடை செய்ய 15 முதல் 20 நாட்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு நல்ல மகசூலுடன், நல்ல விலையும் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க || "உலகின் பழமையான மொழி தமிழ்... அதை விட பெரிய பெருமை வேறென்ன"; பாரிசில் பிரதமர் மோடி புகழாரம்!