மழையில் நனைந்த நெல் மூட்டைகள்... உரிய தொகை கிடைக்குமா..? வேதனையில்  விவசாயிகள்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்... உரிய தொகை கிடைக்குமா..? வேதனையில்  விவசாயிகள்...
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏ.குமாரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சுற்றுவட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் கொள்முதலுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் அறுவடை செய்த சுமார் 5000 நெல்மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் வைத்திருந்தனர். ஆனால், திடீரென பெய்த கனமழையாலும், நிலையத்தில் மேல்கூரை இல்லாததாலும், அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் முற்றிலும் நனைந்து நெல்மணிகள் நாற்றுபோல் முளைத்து வீணாகின.
 
எனவே தமிழக அரசு, நனைந்த நெல்மூட்டைகளை எடைபோட்டு உரிய தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.