இன்று முதல், அமுதம் அங்காடிகளில் தக்காளி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு!! 

இன்று முதல், அமுதம் அங்காடிகளில் தக்காளி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு!! 

சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில், இன்று முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி கொள்முதல் விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது

அத்தியாவசிய  பொருட்களான தக்காளி, வெங்காயம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை  கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள நியாய விலைக் கடைகளில் தக்காளி, வெங்காயம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி உள்பட அத்தியாவசிய பொருட்கள் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tomatoes, Dal and other items to be sold in basic prices in Chennai Amudhan Angaadi from today

ஏற்கனவே தக்காளி ஒரு கிலோ 58/60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.  அதேபோல் இன்று முதல் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு 500 கிராம் 75 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் நலன் கருதி உணவுத்துறை சார்பில் கொள்முதல் விலைக்கு அத்தியாவசிய பொருள்களை விற்க முடிவு செய்யப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க || "எடப்பாடி பழனிசாமிக்கு கொள்கையோ கோட்பாடோ கிடையாது" அமைச்சர் கீதாஜீவன்!