கட்டட இடிப்பாடுகளில் சிக்கி உயிரிழந்த பெண்...கண்ணீர் மல்க பெற்றோர் கோரிக்கை!

கட்டட இடிப்பாடுகளில் சிக்கி உயிரிழந்த பெண்...கண்ணீர் மல்க பெற்றோர் கோரிக்கை!

சென்னை அண்ணாசாலையில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அண்ணாசாலையில் உள்ள ஆயிரம் விளக்கு சுரங்கப்பாதை அருகே தனியாருக்கு சொந்தமான பழமையான கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில், கட்டத்தின் சுவர் சரிந்து சாலையின் பக்கவாட்டில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. அதில் இடுபாடுகளில் சிக்கி ஐ.டி. துறையில் பணியாற்றி வந்த இளம் பெண் பிரியா உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக, பொக்லைன் ஓட்டுனர்  பாலாஜி, மற்றும் பொக்லைன் உரிமையாளர் ஞானசேகரர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : தமிழ்நாடா..? தமிழ்நாய்டுவா... ? மீண்டும் எழுந்த சர்ச்சை...சுட்டிக்காட்டிய இராமதாஸ்...!

இதைத்தொடர்ந்து கட்டடம் இடிக்கும் பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என கட்டட உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே  உயிரிழந்த பிரியாவின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பெண்ணைப் பறிகொடுத்த பெற்றோர், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். 

இதனிடையே இளம் பெண் பிரியா மரணத்திற்கு நீதி கேட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், பெண்ணின் குடும்பதிற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மரணத்திற்கு சென்னை மாநகராட்சியே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.