தங்கம் விலை வரலாறு காணாத  உச்சம்...!!  

தங்கம் விலை வரலாறு காணாத  உச்சம்...!!  

தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்து ஒரு பவுன்  44 ஆயிரம் ரூபாயை தாண்டியது. அதன் பிறகு தொடர்ந்து  தங்கதின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக தங்கத்தின் விலை காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து 45 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 83 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.