நூறு நாள் வேலை விவகாரம்…சாலை மறியலில் தொழிலாளர்கள்!

நூறு நாள் வேலை விவகாரம்…சாலை மறியலில் தொழிலாளர்கள்!

திருச்சி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நூறு நாள் வேலை

இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் ஆகும். இந்த சட்டம் கடந்த 25 மே 2005 முதல் அமலாக்கப்பட்டது. முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009  ஆம் ஆண்டு  காந்தி பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. மக்களால் இது நூறு நாள் வேலை என அழைக்கப்படிகிறது.

தமிழ்நாடு அரசும் கடந்த மார்ச் மாதம் ரூபாய் 949 கோடி நூறு நாள் வேலை திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது. சில பகுதிகளில் நூறுநாள் வேலை திட்டம் நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஒரு மாத காலமாக நூறு நாள் வேலை வழங்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் 3 க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி நிர்வாகம் பாரபட்சத்தோடு செயல்படுவதாகவும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.