எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 1200பேர் அதிமுகவில் இணைந்தனர்!

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 1200பேர் அதிமுகவில் இணைந்தனர்!

ஆத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 1200 பேர் அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகவுக்கே வெற்றி

இந்தக் கூட்டத்தில் வாயிலாக தெரிவித்து இந்த கூட்டத்தின் மூலம் சொல்லுவது என்ன வென்றால் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று அவர் கூறிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற மன்ற தேர்தலில் மட்டும் இல்லை எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக அமோகமாக வெற்றி பெறும் என்றும் கூறினார்.

மேலும் மருத்துவ படிப்பில் ஏழரை சதவீத உள் ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் 450 பேர் நமது மாணவர்கள் சேர்ந்துள்ளது என்பது நமது  அதிமுகவிற்கு கிடைத்த சாதனையாகும். இல்லையென்றால் இந்த 450 பேர் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் இருந்திருப்பார்கள். 

ஸ்டாலினின் பயம்

நமது அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டத்தையும் திமுக முடக்கிக் கொண்டு வருகிறது. நமது திட்டங்கள் செயல்படுத்தினாலே அவர்களுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் தேவைப்படும் என்று கூறினார். திமுக தலைவர் கூறினார் அவர் தினந்தோறும்  காலையில் எழும்போது மிகவும் பயத்துடன் எழுவதாகவும் அவரது கட்சிக்காரர்கள் என்ன செய்தார்கள் தொண்டர்கள் என்ன செய்தார்கள் என்றும்,  தமிழ்நாட்டில் என்ன நடக்கப்போகிறது என்று  பயந்து கொண்டே இருக்கிறேன் என அவர் கூறுகிறார்.

அந்த அளவுக்கு ஸ்டாலின் பயந்து கொன்டு இருக்கிறார். அவருடைய கட்சி நிர்வாகிகளே பார்த்து பயந்து கொள்கிறார் ஆனால் அதிமுக எப்பொழுதும் தொண்டர்களின் நல் ஒழுக்கத்தை கொண்ட கட்சியாகும் இருக்கிறது என்றும் கூறினார்.

எண்ணற்ற திட்டங்கள்

சேலம் மாவட்டத்திற்கு நான் அமைச்சராக இருக்கும் போதும் முதலமைச்சராக இருக்கும் போதும் பல எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளேன். நாம் செய்த திட்டங்கள் அனைத்தும் இன்னும் நூறு ஆண்டுகள் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் என்றும் கூறினார்.