கெளம்பு கெளம்பு... எங்க அண்ணன் சேகர்பாபு இருக்காரு... ஓ.பி.எஸ்.சை காரை விட்டு இறங்கவிடாமல் துரத்திய மக்கள்..!!

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கெல்லிஸ் பகுதி மக்கள் சுற்றிவளைத்து சரமாரியாக கேள்வி எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெளம்பு கெளம்பு... எங்க அண்ணன் சேகர்பாபு இருக்காரு... ஓ.பி.எஸ்.சை காரை விட்டு இறங்கவிடாமல் துரத்திய மக்கள்..!!

சென்னையில் மீண்டும் மழை வெளுத்து வாங்கி வருவதால் நகரின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில்  கெல்லீஸ் பி.ஆர்.கார்டன் பகுதியில் மழைவெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்வையிடச் சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அப்போழுது பொதுமக்கள் சூழ்ந்து  இப்ப மட்டும் ஏன் வர்றீங்க என தொடங்கி இன்னும் பல விவகாரங்களை சுட்டிக்காட்டி அவர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்ததால் ஓ.பி. எஸ். காரைவிட்டே கீழிறங்க முடியாத நிலை ஏற்பட்டது .

முன்னாள் மாவட்டச் செயலாளரும், ஓ.பி. எஸ்.சின் ஆதரவாளருமான பாபு எவ்வளவோ முயன்றும் மக்கள் கொந்தளிப்பு குறையாததால் நிவாரணப் பொருட்களை கொடுக்க முடியாமலும், மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட முடியாமலும் அங்கிருந்து ஓ.பி. எஸ்.கிளம்பிவிட்டார். சென்னையில் பிராட்வே, துறைமுகம், மண்ணடி, சென்ட்ரல், புரசைவாக்கம், கெல்லீஸ், புளியந்தோப்பு, உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளது. இதற்கு காரணம்  தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் அவர் வழங்கி வருவதே  என அப்பகுதி மக்களே கூறுகின்றனர். இதனால் தான் அடித்தட்டு மக்களின் அன்பை பெற்றவராக அமைச்சர் சேகர்பாபு திகழ்கிறார். 

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர்ந்த பதவியில் இருக்கும் ஒ.பி. எஸ்கே இது போன்ற இடங்களுக்கு செல்வதற்கு முன் உள்ளூர் நிர்வாகிகள் மூலம் உரிய முன்னேற்பாடுகள் செய்யாமலா செல்வது என சொந்தக் கட்சிக்குள்ளேயே முனுமுனுக்கிறார்கள்