தமிழ் நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்!

தமிழ் நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்!

தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.  இந்நிலையில், தமிழ்நாட்டில் சுமார் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் நாளை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வரும் 6 ஆம் தேதிவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

முன்னதாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதேபோல், நாளை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக பலத்த மழையும், கன்னியாகுமரி, தென்காசி நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.