தாயின் கண் முன்னே உயிர் பிரிந்த மகள்... மருத்துவரிடம் மன்றாடிய கொடுமை...

தாயின் கண் முன்னே உயிர் பிரிந்த மகள்... மருத்துவரிடம் மன்றாடிய கொடுமை...

ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால் 8 மணி நேரம் ஆம்புலன்ஸில் காத்திருந்த கொரோனா நோயாளி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                              
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொரோனா மூச்சுத்திணறல் காரணமாக ஒரு பெண்ணை அவரது தாய் ஆம்புலன்சில் அழைத்து வந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடியஅனைத்துபடுக்கைகளும் நிரம்பி இருந்ததால்அவருக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் காத்திருந்தார்.நேரம் செல்ல செல்ல நிலைமை கவலைக்கிடமானது.

இருப்பினும் மனதில் ஏதோ ஒரு மூலையில் சிறு நம்பிக்கையுடன் மகளின் அருகில் அமர்ந்திருந்த தாய்க்கு அவர் கவலைக்கிடமானதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை உணர்ந்த தாய் மகளின் உயிரை காப்பாற்றுமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் மன்றாடினார். இதனையடுத்து அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் இளம் பெண்ணை ஆம்புலன்சில் இருந்து இறக்கி படுக்கையில் சேர்த்தனர். ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த இளம்பெண் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.