சென்னையில் கள்ளச் சந்தை மூலம் மதுபானம் விற்கச் சென்ற கும்பலை பிடிக்கச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த நபர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
சென்னை ஓட்டேரி பகுதியில் கள்ளசந்தை மூலம் மது விற்பனை நடப்பதை அறிந்த ஓட்டேரி உதவி ஆய்வாளர் சஜீபா அந்த நபரை சுற்றிவளைத்து அவரிடம் இருந்த மதுபாட்டிலை பறிமுதல் செய்தார்.அதன்பின் அவரது வீட்டுக்கு சென்று அங்கும் பதுக்கிவைத்த மதுபாட்டிலை பறிமுதல் செய்யமுயன்ற போது அங்கு வந்த பெண்கள் காவலர் சஜீபாவை தாக்க தொடங்கினார்கள்.
இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஜிபா மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக தலைமை செயலக காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் உதவி ஆய்வாளர் சஜிபாவை தாக்கிய காஞ்சனா, சசிகலா, பிரியங்கா, மணிகண்டன், செல்வி, நந்தினி, ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகியிருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது.
இந்நிலையில் அவர்களது புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.