மாலை முரசு தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்...ஏன் தெரியுமா?

மாலை முரசு தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்...ஏன் தெரியுமா?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் இந்தக் கோரிக்கை மாலை முரசு தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பாக வெளிவந்தது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 28ஆம் தேதி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி வீதம் 58 ஆம் கால்வாயில் தமிழக அரசு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது விருவீடு பகுதியில் அமைந்துள்ள மிக நீளமான தொட்டி பாலத்தைக் கடந்து உசிலம்பட்டி பகுதி நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

58ம்  கால்வாயில் வந்த தண்ணீரை விருவிடு பகுதி விவசாயிகள் மலர் தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தங்கள் பகுதி விவசாய வாழ்வாதாரத்திற்கும் குடிநீர் ஆதாரத்துக்கும் வழிவகை செய்யும் வகையில் செய்தி வெளியிட்டு தங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற மாலை முரசு தொலைக்காட்சிக்கும் கோரிக்கையை நிறைவேற்றி தந்த  தமிழக அரசுக்கும் அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.