அமைச்சர் செந்தில் பாலாஜி கைது; கரூரில் போலீசார் குவிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது; கரூரில் போலீசார் குவிப்பு!

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதைத் தொடர்ந்து, கரூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரூரில், மின்சாரம் மதுவிலக்கு ஆய தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவர் சகோதரர் அசோக்குமாரின் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என நேற்று காலை எட்டு மணி அளவில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட தொடங்கினர். சோதனையானது பல்வேறு குழுக்களாக பிரிந்து மத்திய போலீஸ் பாதுகாப்பு படை உதவியுடன் நடத்தப்பட்டது. 

நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  செய்யப்பட்டார். அமைச்சரின் சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த காவல் நிலையங்களில், போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டுமென  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு அளித்துள்ளார். மேலும்,கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.