விவசாயிகளின் நிலங்கள் முறைகேடாக தனி நபருக்கு பத்திர பதிவு....கோவில்பட்டியில் போராட்டம்!

விவசாயிகளின் நிலங்கள் முறைகேடாக தனி நபருக்கு பத்திர பதிவு....கோவில்பட்டியில் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு சொந்தமான 68 ஏக்கர் நிலங்கள் தனிநபர் ஒருவருக்கு முறைகேடாக பத்திரபதிவு செய்யப்பட்டதை கண்டித்து, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்திரப் பதிவில் முறைகேடு

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு சொந்தமான 68 ஏக்கர் விவசாய நிலங்களை, விவசாயிகளுக்கு தெரியமால் தனிநபர் ஒருவருக்கு முறைகேடாக கழுகுமலை சார்பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறைகேடாக பதிவு செய்யபட்ட பத்திர பதிவினை ரத்து செய்ய வேண்டும், முறைகேடாக செய்யப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?

விவசாயிகளுக்கு எதிரான முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கழுகுமலை சார் பதிவாளர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.