சுற்றுச்சூழலுக்கு எதிரான குவாரி மீண்டும் திறப்பு!

போலீசார் மற்றும் கிள்ளியூர் சிறப்பு தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக குவாரியை மூடி சென்றனர்.

சுற்றுச்சூழலுக்கு எதிரான குவாரி மீண்டும் திறப்பு!

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மூடிய நிலையில் போலீசார் உதவியுடன் மீண்டும் திறந்து செயல்படும் கல் குவாரியால் பரபரப்பு.

குவாரியால் பாதிக்கப்படும் மக்கள்

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பூட்டேற்றி கக்குளம் பகுதியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பூபதி என்பவர் கல் குவாரி ஒன்றை லீசுக்கு எடுத்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் பாறைகளை உடைத்து தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவார சீரமைப்பு பணிகளுக்கு லாரிகள் மூலம் எடுத்து சென்று பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் அந்தப் பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இந்த குவாரியை மூடக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளாத நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பாறைகள் ஏற்றிச்சென்ற லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை பாதுகாப்பு

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கிள்ளியூர் சிறப்பு தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக குவாரியை மூடி சென்றனர். இந்த நிலையில் இன்று காலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் குவாரி திறக்கப்பட்டு பாறைகள் உடைக்கப்பட்டு லாரிகளில் ஏற்றி செல்லும் பணி நடந்தது பொதுமக்கள் எதிர்ப்பை மீறி போலீசார் பாதுகாப்புடன் கல்குவாரி இயங்க செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

a