10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...!!

10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...!!

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெப்பச் சலனம் காரணமாக கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பபட்டுள்ளது.