ராணிப்பேட்டையில் ஆட்சியர் தலைமையில் கூட்டம்...முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது!

ராணிப்பேட்டையில் ஆட்சியர் தலைமையில் கூட்டம்...முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது!

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறை தனிச்செயலாளர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் அவர்கள் தலைமையில் அனைத்து துறைகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்  நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழக அரசு அனைத்து துறைகளில் சார்பாக பொதுமக்களுக்கு செயல்படுத்தி வரும் திட்டங்கள் திட்டப் பணிகள் குறித்து ஒவ்வொரு துறை வாரியாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் பணிகள் காலதாமதம் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

அதேபோல திட்டங்கள் செயல்படுத்தும் பொழுது அதற்குண்டான துறைகள் ஒருங்கிணைந்து அனுமதி வழங்கி செயல்படுத்துதல் குறித்து துறைகளை ஒருங்கிணைத்து ஆய்வுகளை மேற்கொண்டார். துறைகளை ஒருங்கிணைத்து திட்டங்கள் செயல்படுத்தும் போது எந்த துறையில் காலதாமதமாக அனுமதி வழங்குதல் ஆகியவற்றிற்கான காரணங்களை கேட்டு கேட்டறிந்தார்

இதனை விரிவாக ஒப்புதல் வழங்கி நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கவோ அல்லது அரசிடமிருந்து ஏதேனும் காலதாமதங்கள் இருந்தால் அதனை உடனடியாக தன்னுடைய பார்வைக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார்

மேலும் காலதாமதம் குறித்த விவரங்களை உடனடியாக அறிக்கையாக சமர்ப்பிக்கவும் தெரிவித்தார். இந்த அறிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே போல திட்டங்கள் செயல்படுத்துவதில் எவ்வித தொய்வு இருக்கக் கூடாது பொது மக்களுக்கு அரசு திட்டங்கள் உடனுக்குடன் கிடைக்க அனைத்து துறை அலுவலர்களும் திறன் பட செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.