#ரியல்சிக்சர்,.. ரொனால்டோவை பாராட்டித்தள்ளியுள்ள அன்புமணி ராமதாஸ்.! 

 #ரியல்சிக்சர்,.. ரொனால்டோவை பாராட்டித்தள்ளியுள்ள அன்புமணி ராமதாஸ்.! 

யூரோ சாம்பியன் 2021 தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஸ்பெயின்,போர்த்துக்கல், ஜெர்மனி, இத்தாலி,இங்கிலாந்து போன்ற பல முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது

இந்த விளையாட்டின் ஒருபகுதியாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர்கள் சந்திப்பின்போது,  தன் முன் இருந்த கோக்க கோலா பாடியலை ஓரத்தில் வைத்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு கோக்க கோலாவிற்குப் பதில் தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தினார்.

அந்தக் காணொளியும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களான டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மழமழவென காட்டுத்தீ போல் பரவியது. இந்த சம்பவத்தின் காரணமாக கொக்கோ கோலா நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 29,377 கோடி ரூபாய் அளவிற்கு  4 பில்லியன் அமெரிக்க டாலர்  அளவிற்கு 
நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் ரொனால்டோவின் இந்த செயலை பாமக இளைஞரணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் "யூரோ 2020 கால்பந்து போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில்  கோகோ கோலா பாட்டில்களை அகற்றி விட்டு, தண்ணீரைக் குடியுங்கள் என்று வலியுறுத்தி தண்ணீர் பாட்டிலை வைத்த நிகழ்வு யாரும் சொல்ல முடியாத சுற்றுச்சூழல், உடல் நலப் பாடம். #பாராட்டுகள்!" என்று கூறியுள்ளார்.  


மேலும் இன்னொரு பதிவில் "கோகோ கோலோ ஆதரவுடன் நடந்த நிகழ்வில் இப்படிச் செய்ய தனித் துணிச்சலும், சமூக அக்கறையும் வேண்டும்.  இந்த நிகழ்வால் கோக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு  ரூ. 30,000கோடி சரிந்திருக்கலாம். ஆனால், ரொனால்டோ சொன்ன பாடத்தின் மதிப்பு விலை மதிப்பற்றது. #ரியல்சிக்சர் " எனத் தெரிவித்துள்ளார்.